
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாள் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில், இன்று (ஜனவரி 10) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் – மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.கே.டி. விஜரத்ன, ஒக்டோபர் 2024இல் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.



