
இந்தியத் திரைப்படப் பாடகர் ஜெயச்சந்திரன் இன்று (09) அவரின் 80ஆவது வயதில் காலமானார்.
தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.
கேரளத்தை சொந்த இடமாகக் கொண்ட ஜெயச்சந்திரன், அவரின் தந்தையைப் பின்பற்றி இசைத்துறைக்குள் நுழைந்தார்.
விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற ஜெயச்சந்திரன் – சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.
1973ஆம் ஆண்டு தொடக்கம் தமிழில் திரைப்படங்களுக்கு பாடி வந்த ஜெயச்சந்திரன், இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோரின் இசையில் பாடியுள்ளார்.



