
ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளனவ என்பதை கண்டறியும் வகையில் பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு – பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி – பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 34 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி நிதியத்தின் முக்கிய நோக்கங்களுக்குப் புறம்பான வகையில், மில்லியன் கணக்கான ரூபாவை பெற்றுக்கொண்டதாக, அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தில் 12.25 பில்லியன் (1225 கோடி) ரூபாய் – இவ்வாறு நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



