தலைப்புச் செய்திகள்

கடலில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர்

– பாறுக் ஷிஹான் –

க
டலில் நீராட சென்ற மூவர்  நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி  – உமிரி கடற்கரையில் நேற்று (26) மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதன் போது தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என  மூவர் காணாமல் போயுள்ளனர்.

15 மற்றும் 18 வயதுடை சிறுவர்கள் கடலில் குளிக்கும் போது – அலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். இவர்களை காப்பாற்றுவதற்காக தந்தை முயற்சித்துள்ளார். இதன்போதே, மூவரம் அலையில் அள்ளுண்டு போனதாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தாண்டியடி – உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதைக் கொண்டவர்களே இவ்வாறு காணமல் போயுள்ளனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் கடல் சீற்றமுற்று காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.