தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வி

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தனர்.

சரத் வீரசேகர பொதுஜன பெரமுன கட்சியியிலும், சாகல ரத்நாயக்க சிலின்டர் சின்னத்தைக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணியிலும் போட்டியிட்டனர்.

கடந்த நாடாளுமன்றில் 145 ஆசனங்களை வென்ற பொதுஜன பெரமுன, இம்முறை 03 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.