தலைப்புச் செய்திகள்

அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரினி சாதனை

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி சார்பாக கொழும்பில் போட்டியிட்ட ஹரினி அமரசூரிய இவ்வாறான பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், 2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று – அதிக விருப்பு வாக்குகளை வென்றவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார்.