தலைப்புச் செய்திகள்

வாக்களிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 65% வாக்களிக்கப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிடம் பேசி அவர், பிற்பகல் 2 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 55 வீதமாக பதிவாகியதாக கூறினார்.

“இறுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 65% ஆக இருக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 79% வாக்களிப்புடன் ஒப்பிடும் போது, இது பாரிய வீழ்ச்சியைக் காட்டுகிறது.

எனினும், தேர்தல் ஆணைக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வாக்களிப்பு வீதத்தை அறிவிக்கவில்லை.

மாலை 4 மணி நிலவரப்படி பல முக்கிய மாவட்டங்களில் வாக்களிப்பு முடிவு பின்வருமாறு இருந்தது:

  • கொழும்பு: 65%
  • நுவரெலியா: 68%
  • மாத்தறை: 64%
  • மட்டக்களப்பு: 61%
  • புத்தளம்: 56%
  • அனுராதபுரம்: 65%
  • குருநாகல்: 64%
  • ரத்தினபுரி: 65%