
பொதுத் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 462 புதிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,800ஐ தாண்டியுள்ளது.
செப்டம்பர் 26ஆம் திகதி முதல் நொவம்பர் 11ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த முறைப்பாடுகள் கிடைத்ததாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2,033 முறைப்பாடுகளில் – தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமை மையம் 1,206 முறைப்பாடுகளையும், தேர்தல் முறைப்பாட்டு முகாமைக்கான மாவட்ட மையங்கள் 2,616 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளன.
அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 23 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



