தலைப்புச் செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

டைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 20, நொவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட திகதிகளில் தபால் மூலமாக வாக்களிக்க முடியாதவர்கள், நொவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளிலும் வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமரப்பிப்பதற்கான காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.