
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ – எந்த மாவட்டத்திலும் போட்டியிட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரின் பெயர் – பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படும் எனவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்றைய தினம் (09) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சாணக்க; ”நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு கூறப்படுகிறது. நாமல் ராஜபக்ஷவை ஒரு மாவட்டத்துக்குள் மட்டுப்படுத்தக் கூடாது என, எமது கட்சியின் நிறைவேற்று மற்றும் அரசியல் குழுக்கள் தீர்மானித்துள்ளன” என சூசகமாகத் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ அவரின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது,



