தலைப்புச் செய்திகள்

சுற்றாடல் அமைச்சில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட யானைத் தந்தம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை

சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி யானைத் தந்தங்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜித ஹேரத் – சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் என்ற வகையில், குறித்த யானைத் தந்தங்களை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

இதற்கிணங்க, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி. சூரியபண்டார நேற்று (08) உத்தியோகபூர்வமாக – யானைத் தந்தங்களை பொறுப்பேற்றுக் கொண்டார். அவை விரைவில் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன.