தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அதன் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் வேட்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ஹிஸ்புல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.