
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிக்கையொன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 11, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் – மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் ரத்துச் செய்யப்படுவதாக – குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.09.2024ஆம் திகதிபிறகு இலங்கை மத்திய வங்கியால் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.



