தலைப்புச் செய்திகள்

ஆளுநர் பதவியிலிருந்து ஹாபிஸ் நசீர் ராஜிநாமா

வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தார்.

சுகாதார துறை அமைச்சராக பணியாற்றிய நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ஹாபிஸ் நசீர் அஹமட் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில், வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்த ஹாபிஸ் நசீர், அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றில் ஹாபிஸ் நசீர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அவர் நீக்கப்பட்டமை சரியானது என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.