தலைப்புச் செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநரும் பதவி விலகினார்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் – தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டு பி.எஸ்.எம். சால்ஸ் – ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அதற்கு முன்னர், 2019இல் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலும் இவர் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்தார்.

நேற்றைய தினம் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.