தலைப்புச் செய்திகள்

புதிய அமைச்சரவை இன்று அமைக்கப்படும்

னாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24) அமைச்சரவையை உருவாக்கவுள்ளதாகவும், இது அவரின் நிர்வாகத்தின் ஆரம்பத்தை குறிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நொவம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் – புதிய நாடாளுமன்றம் கூடும் வரை, புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் நிபுண் ஆராச்சி, ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, ஜனாதிபதி ஒரு முக்கியமான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.