தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டா, நேற்று நேபாளம் பறந்தார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (23) பூடான் தலைநகர் திம்பு வழியாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு சென்றுள்ளார்.

காத்மண்டுவை நேற்று (23) சென்றடைந்த கோட்டா, லலித்பூர் – ஜாம்சிகேலில் உள்ள விவாண்டா ஹோட்டலில் தங்கியுள்ளார்.

ட்ரூக் ஏர் விமானம் எண் KB 400 இல் பயணித்த கோட்டாபய ராஜபக்சே திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

கோட்டாபய ராஜபக்ச பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லலித்பூர் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நரேஷ் சுபேடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.