
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை லஞ்ச, ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளர்.
இன்று (04) காலை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஆஜரான நிலையில், அவர் கைதாகியுள்ளார்.
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கிற்கு நாற்காலிகளை வழங்குவதற்காக, சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிறுவனத்தை நீக்கிவிட்டு, பின்னர் அந்த ஒப்பந்தத்தைத் தனக்குத் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு ஃபெர்னாண்டோ வழங்கினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர் கைதாகியுள்ளார்.



