
கொள்ளுப்பிட்டி, 6-வது லேன்-இல் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



