தலைப்புச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெனாண்டோவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

ம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெனாண்டோ, பம்பலப்பிட்டியவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் இறந்தபோது அவருக்கு வயது 57.

அவரது உடல் வீட்டின் உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எராஜ் பெனாண்டோ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் (UPFA) சார்பில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018-ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் அவர் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர், ஐக்கிய தேசியக் கட்சியைச் ​சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில், கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினரை அச்சுறுத்தியிருந்தார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.