
நாடாளுமன்றம் இன்று (24) இரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் டெய்லி மிரருக்கு அறியக் கிடைத்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது,
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று ராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளார் என தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்களை வைத்திருப்பார். அதே நேரத்தில் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக பிரதமர் பதவி வகிப்பார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண் ஆராச்சி ஆகியோர் தலா பல அமைச்சுகளுடன் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அறிவிக்கப்படும்ட என்றும் தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



