
– தில்சாத் பர்வீஸ் –
குப்பை மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை உட்கொண்டதன் காரணமாக, நோய்வாய்பட்ட நிலையில் சம்மாந்துறை வயல் பகுதியில் மீட்கப்பட்ட யானை – சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (24) சனிக்கிழமை உயிரிழந்துள்ளது.
கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குறித்த ஆண் யானையைக் காப்பாற்றுவதற்காக, அம்பாறை மாவட்ட கால்நடை வைத்தியர்கள் குழு வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து, தொடர்ச்சியான சிகிச்சைகளை வழங்கி வந்தனர்.
சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பட்டுள்ள இந்த யானையைக் காப்பாற்றுவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றிய நிலையில் அது உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இறந்த யானையின் உடக்கூறு பரிசோதனைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



