
– எம்.எஸ்.எம்.ஸாகிர் –
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ‘வித்தகர்’ மற்றும் ‘இளங் கலைஞர்’ ஆகிய விருதுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர், விபரங்கள் மற்றும் நூற்பரிசுத் தேர்வுக்காக தெரிவாகியுள்ள நூல்கள் பற்றிய முடிவுகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளன.
அந்த வகையில்,, இம்முறை (2026) வித்தகர் விருது பெறுவோரது விபரங்களின் அடிப்படையில், இலக்கியம் பிரிவில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து முகம்மது முகைதீன் அப்துல் அனஸ், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து திருமதி. செய்னுலாப்தீன் நஸீரா, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சீனித்தம்பி ஜலால்டீன், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சம்சுதீன் தஸ்தகீர் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
ஆற்றுகை பிரிவில், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சின்னராசா காண்டீபன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து கலாநிதி அழகையா விமலராஜ், கலாநிதி. பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து நாகூர்பிச்சை அப்துல் மஜீத் தெரிவாகியுள்னர்.
பல்துறை பிரிவில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து பொன்னையா செல்வநாயகம், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து முஹம்மது அலியார் முஹம்மது றசாக் (றசாக் முஹம்மட் அலி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகம் பிரிவில், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து பொன்னுத்துரை சற்சிவானந்தம் தெரிவாகியுள்ளார்.
நாட்டாரியல் பிரிவில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சிரேஷ்ட அண்ணாவியார் அபூபக்கர் இஸ்ஸதீன் இம்முறை (2026) வித்தகர் விருது பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ‘இளங்கலைஞர்’ விருது பெறுவோரது விபரங்களின் அடிப்படையில், இலக்கியம் பிரிவில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து முகம்மது சியா பாத்திமா றொஷானா, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து கனகரெத்தினம் சிவதர்சன், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து உமறுலெவ்வை உம்மு மஜினா, கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து முஹம்மது மர்சூக் பாத்திமா சுமைய்யா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
ஆற்றுகை பிரிவில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து விஜிவதனி ஜெகதீஸ்வரன், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து திருமதி. தர்மிகா ஜெயதீஸ், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து முருகேசு அருணன், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து உதுமாலெவ்வை முஹம்மட் அஸ்மின், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து செல்வி ஆரணிகா நவமணி ஆகியோரும்
பல்துறை பிரிவில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஜெயராம் யுதிஷ்ரன், நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் ஆகியோரும்
ஊடகம் பிரிவில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து அப்துல் ஹலீம் ஹஸ்பர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து அகமட் லெப்பை நயீம் ஆகியோரும்
நுண்கலை பிரிவில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் செல்வி, ரத்தினசிங்கம் கிருஷ்ணா, போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து புத்திசிகாமணி சிறிகாந் ஆகியோரும்
குறும்படம் பிரிவில், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து கீர்த்திசீலன் கிஷாந் ஆகியோரும் இவ்வருடம் (2026) இளங்கலைஞர் விருது பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்னர்.
கிழக்கு மாகாண நூற்பரிசுத் தேர்வுக்காக இம்முறை (2026) தெரிவு செய்யப்பட்ட நூல்களின் அடிப்படையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து அப்துல் அஸீஸ் எம். பாயிஸ் எழுதிய “வேர்களின் கீழ் நதியிருந்தும்” எனும் சுயபுதுக்கவிதை நூலும், பட்டினமும் சூழலும் பிரதேசச் செயலாளர் பிரிவில் இருந்து இந்திரசூரிய பிரேமசந்திரன் அசோக் எழுதிய ‘தாய்ப்பசு’ எனும் சுயசிறுகதை நூலும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மாரிமுத்து பிரகாஷன் எழுதிய ‘நிகழ்வியமும் இருத்தலியமும் கோட்பாடுகளும் பிரயோகமும்’ எனும் புலமைத்துவம் நூலும், கலாநிதி. அழகையா விமலராஜ் எழுதிய ‘பாஸ்கா நாடகமும் அரசியலும்’ எனும் ஆய்வுசார் படைப்பு நூலும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஜே. முஹம்மட் இஹ்ஸான் எழுதிய ‘பட்டாம் பூச்சி விளைவு’ எனும் அறிவியலும் தொழிநுட்பமும் நூலும் தெரிவாகியுள்ளன.
தவராஜா தனுஷ்கர் எழுதிய ‘நீலாப்பளை பத்தினி அம்பாள் ஓர் மறைக்கப்பட்ட வரலாறு’ எனும் வரலாற்று நூலும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து டொக்டர், ஓ.கே. குணநாதன் எழுதிய ‘முயற்குட்டிக்கு மூன்று கால்கள்’ எனும் சிறுவர் கதை நூலும், சோ. அருளானந்தம் எழுதிய ‘பூப்பூக்கும் ஓசை’ எனும் சிறுவர் பாடல் நூலும், தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் (செங்கதிரோன்) எழுதிய ‘கனகர் கிராமம்’ எனும் சுயநாவல் நூலும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து முனைவர். முருகு தயாநிதி எழுதிய ‘அமிர்தபரிபூரணி முதலிய காவியங்கள்’ எனும் நானாவிதம்/பல்துறை நூலும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை பொன்னம்பலம் எழுதிய “சிவராத்திரி புராணம்” எனும் பல்துறை சமயம் நூலும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் இடம்பெறும் கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2026 நிகழ்வில், இவர்களுக்கு கௌரவம் வழங்கப்படவுள்ளது.



