
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 எம்ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவின் அலங்கரிக்கப்பட்ட விமானியாக துயகொண்டா பணியாற்றினார்.
தேசிய மக்கள் சக்தியுடன் இவர் தொடர்புபட்டமையினால், முந்தைய அரசாங்க அதிகாரிகளால் இவர் கறுப்புப் பட்டியலில் (blacklist) சேர்க்கப்பட்டிருந்தார்.



