தலைப்புச் செய்திகள்

05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

ந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், பரீட்சைகள் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. 

விசாரணை நிறைவில், குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில், தீர்மானிக்கப்படும்.

அதுவரையில் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிய விடப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது