தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிய விடப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில், பாடசாலை அதிபர் உட்பட 06 ஆசிரியர்கள் விசாரணைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளர்.
நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர், பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த படங்கள் பின்னர் பல ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, அனுராதபுரம் மற்றும் நொச்சியாகம பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அவர்களது கைத்தொலைபேசியுடன் விசாரணைக்காக பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பரீட்சைக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்ததா என்பது குறித்தும் மற்றொரு விசாரணை நடந்து வருகிறது.