தலைப்புச் செய்திகள்

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: பொதுஜன பெரமுன அறிவிப்பு

பொதுஜன பெரமுனவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரை, அந்தக் கட்சி இடைநிறுத்தியுள்ளது.

ஜூலை 29 அன்று நடைபெற்ற கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கான பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்டமைக்காக, அவர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உறுப்புரிமையில் இருந்து மட்டுமன்றி பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு, நிறைவேற்றுக்குழு மற்றும் அரசியல் குழு ஆகியவற்றிலிருந்தும் மேற்படி 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.