தலைப்புச் செய்திகள்

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

னாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமான முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் செல்வாக்குச் செலுத்தும் வாக்காளர்களும் அவற்றில் அடங்கும் என – சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பஃப்ரல்) குறிப்பிட்டுள்ளது.

அவர்களில், 25 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு உறுதிப்படுத்தப்படாத தாக்குதல் சம்பவமும் பதிவாகியுள்ளது.