
தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 04 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை 04 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசையில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என – அதிவிசேட வர்த்தமானி ஊடாக தேர்தலுக்கான நேர எல்லை திருத்தப்பட்டுள்ளது.



