தலைப்புச் செய்திகள்

பசில் அமெரிக்கா பறந்தார்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (20) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டார்.

அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் (EK-649) துபாய்க்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷ முதலில் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அவர் எப்போதும் அமெரிக்கா செல்வதற்கு இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்ஷ – இலங்கை மற்றுமு் அமெரிக்க பிரஜாவுரிமைகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.