தலைப்புச் செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறும் சமூக ஊடகப் பதிவுகள்: ஆணைக்குழு முறையிட்டும் அகற்றப்படவில்லை

ஜனாதிபதித் தேல்தலில் – தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்த விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகு Meta, YouTube, TikTok மற்றும் Google போன்ற தளங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட புகார்களில், 121 பதிவுகள் சமூக ஊடகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 116 பதிவுகள் தளங்களால் அகற்றப்படவில்லை, ஏனெனில் அவை சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை 500க்கும் அதிகமானமுறைப்பாடுகளுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.