
ஆகக் குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அவர்களின் இந்த வருடத்துக்கான சொத்துக்கள் மற்றும் கடன் விபரங்களை அறிவிக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது சொத்துக்களை அறிவிக்குமாறு மீண்டும் நினைவூட்டுமாறு – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னதாக, தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இருந்த போதிலும், இன்னும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்கள் பற்றிய தகவல்களை அறிவிக்காதமை குறித்து – லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய புதிய பிரகடனச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் தமது சொத்துக்கள் பற்றிய தகவல்களை அறிவிக்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஒரு வருடத்திற்குக் குறையாத சிறைத்தண்டனை அல்லது அபராதமாக அவரின் 12 மாத சம்பளம், இவற்றில் ஒன்று அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



