
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 22 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி, இதுவரை 11 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை, ஓகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும்.
அதன்படி செப்டம்பர் 21ஆம் திகதி – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என, தேர்தல் ஆணைக்குழு ஜூலை 26 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தது.



