தலைப்புச் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

னாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமக்கு பயமுமில்லை என்றும், அவரிடம் தாங்கள் கடன்படவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்த நிகழ்வுக்கு சமூகமளித்திருந்த நிலையில் இதனை தெரிவிதார்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் கட்சியை விட்டும் விலகிய போதிலும், ஏனைய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.

நெருக்கடியான தருணத்தில் நாட்டை பாதுகாக்கக்கூடிய ஆற்றல் ஜனாதிபதியிடம் இருந்த காரணத்தினால் – அவருக்கு தமது கட்சி ஆதரவினை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று வரையில் இந்த ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், நாட்டுக்காக தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உரையாற்றினார்.