ஒத்தி வைக்க முயற்சித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பெஃப்ரல் எச்சரிக்கை

🕔 July 7, 2024

னாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளதாகவும், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவர்கள் அரசியலமைப்பின்படி செயற்பட்டால், ஓகஸ்ட் முதல் வாரத்தில் தேர்தலை அறிவிப்பதில் எந்தத் தடையும் இருக்காது என பெஃப்ரல் உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தல் ஆணைக்குழு ஒக்டோபர் 17ம் தேதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த அதிகாரம் அரசியல் சாசனத்தால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது” என்றும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்