
நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.
54,000 ரூபாயை லஞ்சமாக பெற முயன்ற, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவருமே – லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜ முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



