
முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்துக்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் – சிறந்த மனநிலையுடன் குழந்தைகளை பெண்கள் பிரசவிக்கின்றமை விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.



