அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

🕔 April 7, 2024

ரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவும் உள்ளடங்கியிருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு அரச ஊழியருக்கும் மேலதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

அத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்