தலைப்புச் செய்திகள்

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்- ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

எனவே பொதுஜன பெரமுனவின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என்று நாமல் மேலும் தெரிவித்தார்.