
தெற்கு காசாவில் பொதுமக்களைக் கொன்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் காஸா பகுதி முழுவதும் ‘பசியின் அளவு’ அதிகரித்து வருவதால், ரஃபா கடவையில் உதவிக்கான போராட்டம் இடம்பெறுவதாக அல் ஜசீரா குறிப்பிடுகிறது.
இதேவேளை வடக்கு காசாவில் உள்ள ‘கமால் அத்வான்’ வைத்தியசாலையின் முற்றத்தில் இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களால் பாலஸ்தீனியர்களை நசுக்கியதாக சாட்சிகள் கூறுவதால் – பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் அவசர விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 18,787 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



