மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம்

🕔 December 17, 2023

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32வது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐந்து வருட காலத்துக்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ரோயல் கல்லூரியில் படித்த இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

1971 இல் ஜப்பான் கல்வி அமைச்சின் முதுகலைப் படிப்புக்கான உதவித்தொகையைப் பெற்று ஜப்பானுக்குச் சென்றார். 1976 இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதன்பிறகு அங்கு கலாநிதி பட்டப் படிப்பையும் மேற்கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்