போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

🕔 December 18, 2023

ல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டம் நடைபெற்றதன் காரணமாக, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தீர்ப்பதற்கு பொலிஸாருக்கு நேரமிருக்ககவில்லை என்றார்.

இது இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பு, கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் பாரியளவில் பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரபல சட்டத்தரணிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், தன்னையும் பொலிஸாரையும் அவர்கள் தங்கள் வழியிலிருந்து விலக்க விரும்புபவர்கள் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு தாம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான வதந்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ், 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’வைத் தொடர்ந்து நாட்டை வழமைக்குக் கொண்டுவருவதற்கு தேசபந்து தென்னகோன் உதவியதால், அவர் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

எனவே, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்கு எதிரான போரில் பொலிஸ் துறைக்குத் தலைமை தாங்குவதற்கு தேசபந்து தென்னகோன்தான் சரியானவர் என தான் கருதுவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மெலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்