இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய நியமனம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) ஆலோசகராக – தலைவர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி அவர் – இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் உயர் செயல்திறன் மையத்தில் அவர் பணியாற்றுவார்.
அண்மைய போட்டிகளில் தேசிய அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆசியக் கோப்பையிலும், 2023 உலகக் கோப்பையிலும் இலங்கை தேசிய அணி சங்கடமான தோல்விகளைச் சந்தித்தது. இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியும் இதேபோன்ற நிலைமையை 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை போட்டியில் எதிர்கொண்டு வெளியேறியது.
இந்த நிலையில் சனத் ஜயசூரியவின் மேற்படி நியமனம் – ஒரு சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது.
முன்னதாக தேர்வாளர்களின் தலைவராக பணியாற்றிய அவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.