பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

🕔 December 14, 2023

ட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி நஷ்டஈட்டை, அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்குமாறு மேற்படி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவரை 2011ஆம் ஆண்டு – சட்டவிரோதமாக கைதுசெய்து, தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில்தடுத்துவைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அஜித் வனசுந்தர (ராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர்) என்ற தனி நபரும், இவ்விவகாரத்தில் பொறுப்புதாரியாகக் கருதப்பட்டு, அவரும் நஷ்டஈடு வழங்க வேண்டுமென

மேலும், மனுதாரருக்கு 01 லட்சம் ரூபாயினை இழப்பீடாக வழங்குமாறு அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.

நீதியரசர்கள் குமுதினி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்