நெதன்யாஹுவின் கட்சிக்கு அரைவாசியளவு ஆதரவு வீழ்ச்சி: தேர்தல் நடந்தால் 18 ஆசனங்களை மட்டுமே பெறும்: கணக்கெடுப்பில் தெரிய வந்தது

🕔 November 4, 2023

ஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் (Likud) கட்சிக்கான ஆதரவு கிட்டத்தட்ட அரைவாசியளவு குறைந்துள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய ஊடகங்கள் பலவற்றில் – இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்புகளில், இஸ்ரேல் இப்போது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி – அதன் இடங்களை 32 இலிருந்து 18 பெறும் என தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, அவரின் ஆளும் தீவிர வலதுசாரி கூட்டணி 42 இடங்களைப் பெறும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதற்கு, ஒரு கட்சி அல்லது கூட்டணி 60 ஆசனங்களுக்கு மேல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்குது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்