ஹமாஸ் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் வீடு மீது ஏவுகணைத் தாக்குதல்

🕔 November 4, 2023

மாஸின் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் காஸா வீட்டின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஏவுகணையைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனாலும் அவர் தற்போது வசிப்பிடத்துககு வெளியே இருக்கிறார் என அல்-அக்ஸா வானொலி தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட போது அவரின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

துருக்கி மற்றும் கட்டார் நாடுகளின் இடையில் வசிக்கும் ஹனியே, 2019 முதல் காஸா பகுதிக்கு வெளியே இருந்து வருகிறார்.

தொலைாட்சியொன்றில் கடந்த புதன்கிழமை ஒளிபரப்பப்பட்ட ஹனியேயின் உரையொன்றில், இஸ்ரேல் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை செய்ததாக குற்றம் சாட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்