கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

🕔 November 4, 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும்.

ஒக்டோபர் மாதத்தில் 4,010 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, நொவம்பரில் இதுவரை 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 1,453 டெங்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

2023ல் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்குமாறும் வலியுறுத்தப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்