பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

🕔 November 3, 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரின் சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையில், 04ஆவது தடவையாக அவரின் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார்.

இருப்பினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக 2020 நொவம்பரில் நியமிக்கப்பட்ட சி.டி. விக்கிரமரத்ன, இவ்வருடம் மார்ச் 25 அன்று ஓய்வு பெறவிருந்தார்.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

இந்த நிலையிலேயே அவருக்கு நான்காவது தடவையாகவும் சேவை நீடிப்பு வழஙக்ப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்