பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது

🕔 November 3, 2023

பாடசாலை பயிற்சிப் புத்தகங்களை தள்ளுபடி விலைத் திட்டத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது.

பாடசாலை பயிற்சி புத்தகங்களை 30% விலைத் தள்ளுபடியுடன் வழங்கப்படும் என கூட்டுத்தபானத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

விலைத் தள்ளுபடி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது என்று கூறிய அவர், அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைமை அலுவலகம் அல்லது அதன் விற்பனை கிளைகளில் – பயிற்சிப் புத்தகங்களை விலைத் தள்ளுபடியில் பெறலாம் என அவர் கூறியுள்ளார்.

பாடசாலை அதிபரின் கடிதத்துடன் கூடிய பிரதிநிதி ஒருவர் – இச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தர்மரத்ன மேலும்குறிப்பிட்டார்.

இன்று சந்தையில் கிடைக்கும் பயிற்சி புத்தகங்களுக்கு போட்டியாக இந்த பயிற்சி புத்தகங்கள் நன்கு பூர்திசெய்யப்பட்ட அட்டை மற்றும் 60 ஜிஎஸ்எம் காகிதத்துடன் தயாரிக்கப்பட்டவை என அவர் கூறியுள்ளார்.

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைக்கு அமைய – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஆலோசனையின் பேரில், பாடசாலை புத்தக விநியோகத்துக்கான விலைத் தள்ளுபடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்