ஒரே இரவில் 71 பேர் உயிரிழப்பு; இஸ்ரேல் வெறியாட்டம்: வைத்தியசாலைகளில் இடமின்றி குவியும் சடலங்கள்

🕔 October 17, 2023
இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்கள், கான் யூனிஸ் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

ஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரே இரவில் குறைந்தது 71 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவின் தெற்கில் கான் யூனிஸ், ரஃபா மற்றும் டெய்ர் எல்-பலாஹ் ஆகிய மூன்று பகுதிகளில் நடத்தப்பட்ட கடுமையான குண்டுவெடிப்புகளில் இவர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் உத்தரவின்படி காஸா நகரத்திலிருந்தும், காஸா வடக்குப் பகுதிகளிலிருந்தும் வெளியேறியவர்களே இவ்வாறு கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களால் நிரம்பியிருக்கும் நிலையில், ஆம்பியுலன்ஸ்களில் மேலும் பலர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவண்ணம உள்ளனர்.

மேலும் பலர் தாக்குதலுக்குள்ளான கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை லெபனானில் இருந்து வேலியை தாண்டி வெடிகுண்டு வைக்க முயன்ற நான்கு பேரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்